வேண்டுதல், வேண்டாமை ....

அன்பே தெய்வமென்று சொல்வது உண்டு;
      அன்பே விலங்கானால் உடைப்பதும் உண்டு;

இன்பமே விரும்பி ஏங்குவதும் உண்டு;
        இன்பத்தை விலக்குவதும் உண்டவன்;

பழத்துடன் பால் வேண்டி அலைவதும் உண்டு;
         கூழே போதுமெனக் கேட்டுண்பது உண்டு;

குழந்தை செல்வம் வேண்டிப் பெறுவதுண்டு;
         குழந்தை பேறு வேண்டாமென வேண்டுவதுண்டு;

கைநிறைய வேண்டும் காசென்பதுண்டு;
       கையளவு பணமே அதிகம் என்பதுண்டு;

வையகமே தனக்கென வரங்கேட்பதுண்டு;
         கையளந்த ஆறடி நிலமே கேட்பதுமுண்டு;

எப்பொருள் வேண்டாமென சொல்லி நின்றாலும்,
           மெய்ப்பொருள்  வேண்டாமென சொல்வதும் உண்டோ?

No comments:

Post a Comment

State of the Indian Economy: Navigating Global Uncertainties

 The global economic landscape is rapidly evolving, with trade policy uncertainty emerging as the key driver of the near-term outlook. Recen...