இனி என் மூச்சுக்காற்று இந்தப்புவியை மாசுபடுத்தாது; இனி என் உடல் இந்த பூமியின் வெப்பத்தைக் கூட்டாது; இனி என்னுடைய நாற்ற வியர்வை வெளியே கொட்டாது; இனி நான் துப்பும் எச்சிலும் தெருவைக் குப்பையாக்காது; இனி என் மூத்திரமும் மலஜலமும் அழுக்காக்காது ; இனி என் இரத்தமும்,விந்துவும் பயன்படாது; இனி என் அன்பும் , பாசமும் உபயோகமாகாது; இனி என் அகந்தையும், ஆணவமும் அசுத்தப்படுத்தாது; இனி என் பெயர் எழுதிய தான்யங்களும் கிடையாது; இனி ஒரு துணியும் என்னை மறைக்காது; இனி எந்தக் கூரையும் என்னை எதிர்பார்க்கவில்லை; இனி தனியொரு தூக்கமும் எனக்கு தேவையில்லை ; இனி என் எண்ணங்கள்கூட யாரையும் கட்டுப்படுத்தாது; -ஏன் இனி நான் விடும் மூச்சுகூட இப்புவியை மாசுபடுத்தாது
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!