பிராமணர்களின் பூர்வீகம் -ஆரியன் வந்தேறியா ?

 பிராமணர்கள் பூர்விகம் இந்த பாரத மண்தான் 

1)இந்தியாவை கர்மபூமி-இப்புவியில் உன்னதமான இடம்-என்று வேதங்கள் சொல்கின்றன. பிராமணர்கள் கடைமையாக  தங்கள் சங்கல்ப மந்திரங்களில் இந்திய/பாரத புண்ணிய பூமியில் சடங்குகளை செய்வதாகத்தான் சொல்லித் தொடங்குவார்கள் 

2)இந்தியாவில் தான் பிராமணர்களின், இந்துக்களின் அனைத்து வழிபாட்டுதலங்களும் உள்ளன.காசியும், இராமேஸ்வரமும் இவைகளில் மிக முக்கியமானவை.வேற்று நாட்டிலிருந்து வந்தவரானால் இந்தியாவில் வழிபாட்டுத்தலங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்க மாட்டார்கள். இந்நாட்டில் தோன்றிய இராமனையும், சிவனையும், கண்ணனையும் கடவுளர் ஆக்கியிருப்பார்களா.

3)நம் தாய்மொழி தமிழ்,சிவபெருமானின் அருளால் அகத்திய முனிவரால் தொடங்கப்பெற்றது என்று அறிவோம். அவர் பிராமணர்.தமிழின் மிகத்தொன்மையான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியரும் பிராமணர். ஏனெனில் அவர் வடமொழி ஐந்திரம் என்னும் இலக்கண நூல் நன்கு பயின்றவர்.

இவையெல்லாம் நம்கண்முன்னே உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல் தெரியும் சான்றுகள்.

ஆரியன் படையெடுப்பு என்பது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் வலிந்து திணிக்கபட்ட கோட்பாடு .இது நம் இந்திய சமுதாயத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில்,பிரிட்டிஷார் வேண்டுமென்றே  விதைத்தது  . ஏனெனில் ஆரியன் தன் மதத்தை வெளியில் இருந்து கொண்டு வந்திருந்தால் ,கௌதம புத்தர் தன்னுடைய கோட்பாட்டை "ஆரிய மார்க்கம்/வழி  " என்றும் ,தன் கொள்கைகளை "ஆரிய சத்தியம் " என்றும் சொல்லியிருப்பாரா ?ஆரியம் என்ற வட மொழி சொல்லுக்கு "உயர்ந்த/உன்னதமான " என்பதுதான் உண்மையான பொருள்.


ஆரியன் வந்தேறிகள் என்று சொல்லுமுன் இவற்றை சற்றே யோசித்து பார்க்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம் .

No comments:

Post a Comment

State of the Indian Economy: Navigating Global Uncertainties

 The global economic landscape is rapidly evolving, with trade policy uncertainty emerging as the key driver of the near-term outlook. Recen...