மற்றுமொரு வித்யாசமான கோணம்: வாமனனை "திருக்குறளப்பன் " என்று மலைநாட்டு திவ்யதேசத்தில் உள்ளது.இவன் மூவடி கேட்டான் என்று தெரிவிக்கிறார்.அது போல் குறளும் ஈரடிதான். ஆனால் தாவி உலகையே அளக்கிறதாக நண்பரொருவர் நகைச்சுவையாக ஒப்பிட்டார். அதனாலேயே வள்ளுவரும் வாமனனை தன் குறளில் 610ல்" அடியளந்தான்.." என்று காண்பித்தாரோ" ?!!! திருவாய்மொழியில் "அறவனை, ஆழிப்படை அந்தணனை.." 2848 பாசுரத்தில் வருகிறது.திருவள்ளுவரும் "அறவாழி அந்தணன்"என்கிறார்!! திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை கூறும் பல இடங்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியையே மேற்கோள் காட்டுகிறார். ஒரு மன்னவனின் மாட்சியையும், வல்லமையையும் விளக்கும் அதிகாரத்துக்கு, “இறைமாட்சி” என்று பெயர் வைத்திருந்தார் வள்ளுவர். இறைவன் என்ற சொல் ஆதியும் அந்தமும் இல்லாமல் மூல பரம் பொருளாக இருக்கும் அந்த பகவானையே குறிக்கும். அப்படி இருக்கும் போது கேவலம், இந்த உலகில் பிறந்து இறக்கும் ஒரு மனிதனான அரசனை குறிக்க அந்த உயர்ந்த சொல்லை பயன்படுத்தலாமா? என்று பரிமேலழகரை பலர் கேட்டனர். அவர் புன்னகைத்த படியே திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தை கா...
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!