திருஞான சம்பந்தரும் , திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள் என்பது வரலாற்றின்படி சிலரின் தெளிந்த அபிப்பிராயம். கொள்கைகளால் இருவரும் வேறுபட்டவராயினும் “கற்றானைக் கற்றானே காமுறுவான்” என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்க ஆவல் கொண்டிருந்தனர் என்பதும் ஒருவருடன் ஒருவர் தமிழில் கவிபாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர் என்பதும் கீழ்க்கண்ட இரண்டு தமிழ் பூம்பாக்களால் விளங்கும். கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக் கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம் அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா படியுண்ட பெருமானைப் பறித்து பாடி பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே என்பது ஞானசம்பந்தர் தொடுத்த பாட்டு. அதாவது தன்னைத் தாயாக பாவித்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார். தன்னைக் காத்துக் கொள்ளக் கருதிய வாளை மீனானது, முதலையின் வாயினின்று பிழைத...
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!