தீண்டாமை எனும் வியாதி, திரும்பி வந்தது ‘கோவிட்’டாய்!, ‘ரெட்டை டம்ளரை’ வீட்டுக்குள் அழைத்து வந்தது அதிரடியாய்! , “தள்ளி நில் தொடாதே”, ஆச்சார பாட்டியாய், என்னிடம் சமூக இடைவெளி கேட்டது ! “கை, கால் அலம்பாமல் வீட்டுக்குள் வராதே” விரட்டிய அம்மாவை விஞ்சியது! ‘சோப்பையும் போட்டு கழுவிக்கொண்டே இருந்தால் மட்டுமே தலை தப்பித்தாய்’ தாயாய் தனயனைக் கொஞ்சியது!. பெரியவரிடம் பேசினால் வாயைப் பொத்தி பேசணும்- ஒருபடி மேலே சென்று வாயை மூக்கை ரெண்டையும் மூடியே வைத்து பேசணும்- தீயாய் எச்சரித்து சென்றதம்மா!- அது கண்ணுக்கு தெரியாத ‘மஹா மாரி’யம்மா
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!